Home நாடு பெட்ரோல் நிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

பெட்ரோல் நிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

625
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512புக்கிட் மெர்த்தாஜாம், ஏப்ரல் 13 – ஜாலான் கூலிம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றின் கழிவறையில் சக்தி வாய்ந்த கையெறி வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

செப்ராங் பிறை டி9 காவல்நிலையத்திற்கு இன்று மதியம் 3.10 மணியளவில் பொதுமக்களிடமிருந்து இது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

#TamilSchoolmychoice

மாலை மணி 5.25 மற்றும் 6.37க்கு சிறிய அளவிலான இரண்டு வெடிச் சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தற்போது அங்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டு காவல்துறை விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.