Home நாடு எனது கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை: துன் மகாதீர்

எனது கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை: துன் மகாதீர்

663
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 14 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தொலைக்காட்சிப் பேட்டிக்குப் பின்னரும் தாம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை என துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

Tun Mahathirநஜிப்பைப் பதவியை விட்டு இறக்கியே தீருவது என்பதுபோல் கங்கணம் கட்டிக் கொண்டு, இடைவிடாது பேட்டிகளின் வழியும், தனது இணையப் பதிவுகள் மூலமும் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றார் மகாதீர்.

தான் தனித்து இருந்தாலும் கூட, மக்களின் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்புவது எந்த விதத்திலும் தவறல்ல என தாம் கருதுவதாக அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“இந்த கேள்விகளை பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே யாரால் பதில் அளிக்க முடியுமோ, அவர்களிடம் கேட்கிறேன். தொலைக்காட்சியில் பேட்டி அளிக்கிறீர்கள் எனில் அது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் சொல்ல விரும்புவது என்றே நான் கருதுகிறேன்,” என்று தனது வலைப்பக்கத்தில் மகாதீர் கூறியுள்ளார்.

ஜோகூர்-சிங்கப்பூர் பாலம் கட்டாததால் எனக்கு வருத்தமல்ல – மகாதீர்

ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்கு பாலம் கட்டாததால் தமக்கு நஜிப் மீது கோபம் என்று கூறப்படுவதை மறுத்துள்ள அவர், அது உண்மையெனில், 13வது பொதுத் தேர்தலில் நஜிப்புக்கு ஆதரவாக தாம் பிரசாரம் மேற்கொண்டிருக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

“பாலம் கட்டாததால் எனக்கு கோபம் எனில், நஜிப்பை பொதுத் தேர்தலுக்கு முன்பே பதவி விலகச் சொல்லி கேட்டிருப்பேன். ஆனால் நஜிப்பின் வெற்றிக்காக நான் பிரசாரம் செய்தேன். அல்தான் துயா விவகாரத்தில், சைருலுக்கு கட்டளையிட்டது யார் என்பதே என் கேள்வி. நான் நஜிப்பை குற்றம் சாட்டவில்லை. காவல்துறையோ, ராணுவமோ தங்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினாலோ அல்லது தங்களுக்கு உத்தரவிடப்பட்டாலோ மட்டுமே தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுவர்,” என்று மகாதீர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.