Home கலை உலகம் விஜய்யின் ‘புலி’ படத்தில் மேலும் இரண்டு நாயகிகளா?

விஜய்யின் ‘புலி’ படத்தில் மேலும் இரண்டு நாயகிகளா?

829
0
SHARE
Ad

Vijay in Puli-Stills-Image-Gallery-Vijay 58-Tamil movie 2015-Onlookers Mediaசென்னை, ஏப்ரல் 15 – சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புலி’. படத்திற்கு இசை தேவி ஸ்ரீபிரசாத். ஒளிப்பதிவு நட்ராஜ்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவின் காட்டுபகுதியில் நடந்துவருகிறது. பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தில் ஏற்கனவே இரண்டு நாயகிகளாக ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்சிகா நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்னொரு கதாபாத்திரத்திற்காக அட்டக்கத்தி படத்தில் அறிமுகமான நந்திதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவரும் சம்மதம் சொல்லி புலி படத்தில் இணைந்துள்ளாராம்.

#TamilSchoolmychoice

இதுதவிர ‘அப்பா டக்கர்’ மற்றும் ’மாப்பிள்ளை சிங்கம்’ படங்கள் மூலம் தமிழுக்கு மீண்டும் நடிக்க ஆரப்பித்த அஞ்சலியிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அஞ்சலி நடிப்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில் நந்திதா படத்தில் நடிக்க உள்ளார்.  இந்நிலையில் ’புலி’ படத்தில் நான்கு நாயகிகள் நடிக்க உள்ளனராம்.