ஒட்டாவா, ஏப்ரல் 15 – ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளையடுத்து தனது பயணத்தின் இறுதி நாடான கனடாவிற்கு நேற்றிரவு சென்றடைந்தார்.
தலைநகர் ஒட்டாவா நகருக்கு வந்து சேர்ந்த அவருக்கு கனடா நாட்டு வாழ் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். கடந்த 42 ஆண்டுகளில் கனடா நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
கனடாவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் மோடி கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பரை சந்தித்து அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் வர்த்தக முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
#TamilSchoolmychoice
கனடாவின் டொரண்டோ மற்றும் வான்கோவர் நகரங்களுக்கும் செல்ல இருக்கும் அவர் கனடா பயணத்தை முடித்து விட்டு வெள்ளி அன்று இந்தியா திரும்புகிறார்.