Home நாடு மலாக்காவில் எச்1என்1 தொற்றியதாக நம்பப்படும் மாணவர் மரணம்!

மலாக்காவில் எச்1என்1 தொற்றியதாக நம்பப்படும் மாணவர் மரணம்!

677
0
SHARE
Ad

H1N1மலாக்கா, ஏப்ரல் 15 – மலாக்காவிலுள்ள சீனப் பள்ளி மாணவர் ஒருவர் எச்1என்1 வைரஸ் காய்ச்சலால் நேற்று இரவு மரணமடைந்தார் என மலாக்கா சுகாதார இயக்குநர் டத்தோ கசாலி ஓத்மான் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட 10 வயதான அம்மாணவர், பின்னர் சுயநினைவு இழந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

#TamilSchoolmychoice

என்றாலும், “அம்மாணவர் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் யாரும் அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிட வேண்டாம்” என்றும் கசாலி வலியுறுத்தியுள்ளார்.