Home நாடு மஇகா – சங்கப் பதிவக வழக்கு மே 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

மஇகா – சங்கப் பதிவக வழக்கு மே 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

518
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 15 – இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கு, விசாரணைகளுக்குப் பின்னர் எதிர்வரும் மே 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

MIC-Logo-Slider2009ஆம் ஆண்டுக்கான மத்திய செயலவையை மூன்றாம் தரப்பாக (Intervener) அனுமதிக்கக் கோரி மஇகா உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ எம்.சரவணன் மற்றும் கெடாவைச் சேர்ந்த ஆனந்தன் ஆகியோர் செய்திருந்த விண்ணப்பங்கள் மீதான விவாதங்களை நீதிபதி இன்று செவிமெடுத்தார்.

2009 மத்திய செயலவையை மூன்றாம் தரப்பாக அனுமதிக்கக் கோரும் விண்ணப்பம் மீது வாதிகளான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பு வழக்கறிஞர்கள் ஆட்சேபம் தெரிவித்து வாதிட்டனர்.

#TamilSchoolmychoice

இருதரப்பு வாதங்களையும் செவிமெடுத்த பின்னர், வழக்கை மீண்டும் அடுத்த மே மாதம் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி அன்றைய தினம் சரவணனின் மனு மீதான தீர்ப்பையும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

வழக்கு முடியும் வரை சங்கப் பதிவகம் தனது முடிவுகளை செயல்படுத்தக் கூடாது என்றும், மஇகா கிளைகளின் தேர்தல்கள் நடத்தப்படக் கூடாது என்றும் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியிருந்த இடைக்காலத் தடையுத்தரவு அடுத்த விசாரணைத் தேதியான மே 12ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால மனுக்களின் விசாரணைகள் முடிந்த பின்னரே, வழக்கின் மைய விவகாரமான சீராய்வு மனு (Judicial Review) மீதான வாதப் பிரதிவாதங்கள் தொடங்கும் – வழக்கும் தொடர்ந்து நடைபெறும் – என எதிர்பார்க்கப்படுகின்றது.