Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியா, இந்தியா உட்பட 57 நாடுகள் இணைந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி! 

மலேசியா, இந்தியா உட்பட 57 நாடுகள் இணைந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி! 

642
0
SHARE
Ad

aiib-foundersபெய்ஜிங், ஏப்ரல் 16 – சீனா தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் மலேசியா, இந்தியா உட்பட 57 நாடுகள் உறுப்பினர்களாக இணைந்துள்ளன.

கடந்த ஆண்டு சீன அதிபர் ஜி ஜிங்பிங், ஆசிய நாடுகளின் பொருளாதாரத் தேவைகளை கவனிக்க தனித்த வங்கி வேண்டும் என்ற கோரிக்கையை ஆசிய நாடுகள் மத்தியில் வலியுறுத்தினார். இதற்கு முக்கியக் காரணம், மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தில் உலக வங்கியும், அனைத்துலக நாணய நிதியமும் இருந்ததால் தான். எனவே, ஆசிய நாடுகளுக்கு தேவைப்படுகின்ற தருணத்தில் உதவ, இந்த வங்கி உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று இந்த வங்கியில் இணைந்த உறுப்பினர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சீனா, இந்தியா, மலேசியா, நேபாளம், இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான், மாலத்தீவு, பிரான்ஸ், பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பிரேசில், டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் என மொத்தம் 57 நாடுகள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த வங்கி தொடர்பாக சீனாவின் துணை அமைச்சர் கூறுகையில், “ஆசிய நாடுகளின் உள்கட்டமைப்பிற்கென உருவாக்கப்பட்ட பலதரப்பு வளர்ச்சி வங்கி இது. இங்கு எப்பொழுதும் வெளிப்படையான நிர்வாகமே இருக்கும். இந்த வங்கியில் இணைவதற்கான புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வங்கியின் செயல்பாடுகள் இந்த வருடத்தின் இறுதியில் இருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீனா தலைமை வகிப்பதால் அமெரிக்காவும், ஜப்பானும் இந்த வங்கியில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.