Home வணிகம்/தொழில் நுட்பம் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தொடங்க 20 நாடுகள் ஒப்புதல்!

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தொடங்க 20 நாடுகள் ஒப்புதல்!

642
0
SHARE
Ad

china-xijinping2பெய்ஜிங், நவம்பர் 1 – இந்தியா, சீனா உள்ளிட்ட 20 நாடுகள் இணைந்து ‘ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி’ (Asian  Infrastructure Investment Bank)-யை சீனாவின்  தலைநகர் பெய்ஜிங்கில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தாகியுள்ளது.

கடந்த ஆண்டு சீன அதிபர் ஜி ஜிங்பிங் (படம்), ஆசிய நாடுகளின் பொருளாதாரத் தேவைகளை கவனிக்க தனித்த வங்கி வேண்டும் என்ற கோரிக்கையை ஆசிய நாடுகள் மத்தியில் வலியுறுத்தினார்.

மேலும், இதற்காக சுமார் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்ய சீனா தயாராக உள்ளது என்றும் அறிவித்து இருந்தார். ஜிங்பிங்கின் கோரிக்கையை ஏற்ற ஆசிய நாடுகள் இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளில் இறங்கின.

#TamilSchoolmychoice

சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் செயல்பட உள்ள இந்த வங்கியின் தலைமை இயக்குநராக சீனாவின் துணை நிதியமைச்சரான ஜின் லிக்யூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா, சீனாவைத் தவிர,  மலேசியா,  ஜப்பான்,  இலங்கை,  வியட்நாம்,  தாய்லாந்து, பாகிஸ்தான்,  வங்கதேசம் உள்ளிட்ட 20 நாடுகள் இந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உறுப்பினர்களாக உள்ளன.

ஆசிய நாடுகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், உலக வங்கி உள்ளிட்ட மேற்கத்திய வங்கிகளை சார்ந்திருக்காமல் நிதி விவகாரத்தில் ஆசிய நாடுகள் தன்னிச்சையாக செயல்படும் நோக்கில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தொடங்கப்படவுள்ளது என்று ஜிங்பிங் அறிவித்து இருந்தாலும், மேற்கத்திய நாடுகளில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்துவது போல் ஆசிய அளவில் அனைத்து விவகாரங்களிலும் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்கு முன்னோட்டமாகவே இந்த வங்கி தொடங்கப்பட உள்ளது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.