Home கலை உலகம் மே 15-ல் சூர்யாவின் மாஸ் – வெங்கட்பிரபு அறிவிப்பு!

மே 15-ல் சூர்யாவின் மாஸ் – வெங்கட்பிரபு அறிவிப்பு!

544
0
SHARE
Ad

surya,venketசென்னை, ஏப்ரல் 17 – வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘மாஸ்’ படம் அடுத்த மாதம் 15-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சான் தோல்விக்குப் பிறகு, வெங்கட்பிரபு கூறிய ஃபேண்டஸி த்ரில்லர் கதை சூர்யாவிற்கு பிடித்துப் போக, உடனடியாக தொடங்கப்பட்ட படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. படம் எப்போது திரைக்கு வரும் என சூர்யா ரசிர்கள் தொடர்ந்து நச்சரித்த வந்த நிலையில், மே 15-ம் தேதி மாஸ் வெளியாகிறது. படத்தில் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று வெங்கட்பிரபு நேற்று டுவிட்டரில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஆவிகளின் நடமாட்டம் பற்றிய கதை, சூர்யா இதுவரை பண்ணாத புது முயற்சி என ஏக பில்டப்புகள் கோலிவுட் வட்டாரங்களில் உலாவி வரும் நிலையில், படம் பற்றியோ, தனது கதாபாத்திரம் பற்றியோ சூர்யா இதுவரை வாய் திறக்கவில்லை என்பது ஆச்சரியமே.

#TamilSchoolmychoice

ராஜு பாயிடம் கற்ற பாடமாக இருக்குமோ?