Home உலகம் மோடியின் எழுச்சியே இந்தியாவின் எழுச்சி – ஒபாமா புகழாரம்! 

மோடியின் எழுச்சியே இந்தியாவின் எழுச்சி – ஒபாமா புகழாரம்! 

504
0
SHARE
Ad

obama_modiநியூயார்க், ஏப்ரல்.17 – இந்தியப் பிரதமர் மோடி சீர்திருத்தவாதிகளுக்கெல்லாம் தலைமை தாங்குபவர். அவர் வளர்ச்சியே இந்திய நாட்டின் வளர்ச்சி என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் நாளிதழின் கட்டுரை ஒன்றிற்கு இந்தியாவின் சீர்திருத்தவாதி என்ற தலைப்பில் நரேந்திர மோடி பற்றி ஒபாமா எழுதியுள்ளதாவது:-
“மோடி சிறுவனாக இருந்த போது தனது தந்தையுடன் இணைந்து தேநீர் விற்று குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளார். இன்று, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக உருவெடுத்துள்ளார். வறுமையில் வாழ்க்கை தொடங்கியது முதல் பிரதமராகியுள்ளது வரை அவரின் எழுச்சி இந்தியாவின் எழுச்சியை பிரதிபலிக்கிறது.”

“இந்தியாவைப் போன்று, அவர் நவீனத்தையும், பழமையையும் பின்பற்றுகிறார். யோகா பயிற்சி செய்யும் அவர் டிவிட்டரிலும் தொடர்பில் உள்ளார். ‘டிஜிட்டல் இந்தியா’ செயல்திட்டம் அவரின் கற்பனையில் உருவானது. அவர் வாஷிங்டன் வந்த போது, அவரும், நானும் மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தி ஆகியோரின் போதனைகள் பற்றி விவாதம் மேற்கொண்டோம். அவர்களின் வார்த்தைகளை பிரதிபலித்தோம். மதச்சார்பற்று 100 கோடி இந்தியர்கள் இணைந்து வாழுவதை, உலகத்திற்கு ஊக்கம் தரத்தக்க முன்மாதிரி என்று மோடி பெருமை கொண்டிருந்தார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.