Home நாடு எச்1என்1, கை, பாத, வாய்ப்புண் தொற்று நோய்களால் இறப்பது அரிது: சுப்ரா!

எச்1என்1, கை, பாத, வாய்ப்புண் தொற்று நோய்களால் இறப்பது அரிது: சுப்ரா!

477
0
SHARE
Ad

Datuk-Seri-Dr-S.Subramaniamபுத்ராஜெயா, ஏப்ரல் 17 – எச்1என்1 மற்றும் கை, பாத, வாய்ப்புண் தொற்று நோய்களால் இறப்பது அரிது என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்நோய்களால் இருவர் உயிர் இழந்ததாக வெளியான தகவல், சுகாதாரத்துறை அமைச்சுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் இருவரது உயிரிழப்புக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என டாக்டர் சுப்ரமணியம் கூறினார்.

“எச்1என்1 மற்றும் கை, பாத, வாய்ப்புண் தொற்று நோய்கள் என்பன மலேசியாவில் சகஜமான ஒன்று. இந்த நோய்க் கிருமிகள் எப்போதுமே நம்மைச் சுற்றி உள்ளன. அதே சமயம் இத்தகைய நோய்த் தொற்றுகளால் ஒருவர் உயிர் இழப்பது என்பது வழக்கமான ஒன்றல்ல.”

#TamilSchoolmychoice

“அதற்காக அத்தகைய மரணங்கள் அறவே ஏற்படாது என்றும் கூறுவதற்கில்லை. அதேசமயம் நாட்டில் ஏராளமானோர் இத்தகைய நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்பட்டு பின்னர் அவற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது” என்றார் டாக்டர் சுப்ரமணியம்.

இவ்விரு நோய் தொற்றுகளும் மரணத்தை ஏற்படுத்தக்கூடியவை அல்ல என்பதால் பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், சுகாதாரத் துறை அமைச்சு தற்போதைய நிலவரத்தை நுணுக்கமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.

“இருவர் மரணம் அடைந்ததற்கான காரணத்தை முதலில் உறுதி செய்ய வேண்டும். அதுவரை உயிரிழப்பிற்கான காரணங்களை யாரும் யூகிக்க வேண்டாம்” என டாக்டர் சுப்ரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.