Home வாழ் நலம் கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் கற்றாழை

கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் கற்றாழை

625
0
SHARE
Ad

aloeveraகோலாலம்பூர், மார்ச்.5- கற்றாழையில் கூந்தலுக்கு ஏற்ற நிறைய நன்மைகள் உள்ளன. அதாவது பொடுகுத் தொல்லை, கூந்தல் உதிர்தல், பொலிவிழந்த கூந்தல் போன்றவற்றை சரிசெய்ய சிறந்ததாக உள்ளது.

கற்றாழையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் அது கூந்தல் உதிர்தலைத் தடுப்பதில் பெரும் உதவியாக உள்ளது. அதற்கு தலைக்கு குளிக்கும் போது ஷாம்புவுடன் சற்று அதிகமாக கற்றாழை ஜெல்லையும் சேர்த்து கூந்தலுக்கு தடவி குளித்தால் கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.

கூந்தலில் உள்ள வறட்சியை நீக்கி கூந்தலை பட்டுப் போன்று வைத்துக் கொள்ள கற்றாழையின் ஜெல்லை வாரம் ஒரு முறை பயன்படுத்த வேண்டும்.

#TamilSchoolmychoice

பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால் அதனை நீக்குவதற்கு எளிமையான வழி கற்றாழை ஜெல் தான்.

அதற்கு வாரம் ஒரு முறை கற்றாழையின் ஜெல்லை  தடவி, அரை மணிநேரம் ஊற வைத்துக் குளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக பொடுகுத்தொல்லை குறைவதை காணலாம்.