சென்னை, மார்ச்.5- அமீரின் ஆதிபகவன் படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியது தொடர்பாக இயக்குனர் அமீர் தணிக்கை குழு மீது புகார் தெரிவித்திருந்தார்.
தணிக்கை குழு உறுப்பினர்கள் சான்றிதழுக்கு ஏற்ப பணம் வசூலிப்பதாகவும் ‘மாஃபியா’ கும்பல் போன்று செயல்படுவதாகவும் அமீர் குற்றம் சாட்டியிருந்தார்.
மத்திய தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் அமீர் மீது தற்போது புகார் தெரிவித்துள்ளார்.
அமீரின் ஆதிபகவன் ஆபாசமாக இருந்ததாகவும் அதனால் ஏ சான்றிதழ் மட்டுமே தர முடியும் என்று தணிக்கை குழு வாதிட்டதாகவும் அப்போது அமீர் பணம் தர முன் வந்ததாகவும் அந்த உறுப்பினர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ஏ சான்றிதழ் தந்ததால் அமீர் மிரட்டல் விடுவதாகவும் ’மாஃபியா’ கும்பல் என்று சொன்னது மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.