Home கலை உலகம் ஸ்ரேயாவுக்கு கைகொடுக்கிறார் அமீர்!

ஸ்ரேயாவுக்கு கைகொடுக்கிறார் அமீர்!

561
0
SHARE
Ad

Kollywood-news-8658 (1)சென்னை, மார்ச் 18 – பாலா இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த ஸ்ரேயாவுக்கு அமீர் கைகொடுக்க உள்ளார். பரதேசி படத்தையடுத்து பாலா இயக்கும் படம் கரகாட்டம். இதில் கதாநாயகியாக ஸ்ரேயா நடிப்பதாக கூறப்பட்டது. இதற்காக ஸ்ரேயாவை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

கிராமத்து வேடத்துக்கு பொருந்தமாட்டார் என்பதால் அவருக்கு பதிலாக வரலட்சுமியை தேர்வு செய்தார் பாலா.படம் தனக்கு திருப்பு முனையாக இருக்கும் என்று எதிர்பார்த்த ஸ்ரேயா ஏமாற்றமடைந்தார். அவரது கவலையை போக்கும் விதமாக அமீர் தனது படத்தில் நடிக்க ஸ்ரேயாவை அழைத்திருக்கிறார்.

இயக்குனர் சரண் உதவியாளர் கார்த்திக் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.அமீர் படம் என்றாலே வருடக்கணக்கில் படப்பிடிப்பு நடக்கும் என்ற பேச்சு இருக்கிறது. அந்த பேச்சை மாற்றும் விதமாக இப்படம் இருக்கும்.

#TamilSchoolmychoice

வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பெப்சி அமைப்பின் தேர்தல் நடக்க உள்ளது. அது முடிந்தபிறகு ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கி செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அமீர் தரப்பு தெரிவிக்கிறது. இப்படத்தில்தான் அமீருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்க உள்ளார்.