Home கலை உலகம் ‘சைமா’ விருது விழா: நடிகை ஸ்ரேயாவின் அசத்தலான பிரத்தியேகப் படங்கள் (தொகுப்பு 11)

‘சைமா’ விருது விழா: நடிகை ஸ்ரேயாவின் அசத்தலான பிரத்தியேகப் படங்கள் (தொகுப்பு 11)

698
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 14 – தமிழ் சினிமாவில் எப்போதும் துறுதுறுப்பாக நடிப்பவர் நடிகை ஸ்ரேயா. சினிமாவில் மட்டுமல்ல நிஜத்தில் அவரது குணம் அப்படித்தான். அதனாலேயே ஸ்ரேயாவை குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.

குறிப்பாக விழாக்களில் கலந்து கொள்ளும் போது அவரது ரசிகர்களுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்.

கோலாலம்பூரில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற “சைமா 2014” விழாவில் மிகவும் அழகான உடையணிந்து வந்த ஸ்ரேயா, வெளியே அவரைப் பார்ப்பதற்கு ஆவலோடு காத்திருந்த ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களுக்கு மிக அருகே சென்று தம்படம் (செல்ஃபி) எடுத்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

IMG_4169

முதல் நாள் விருது விழாவில் பழுப்பு நிற கவர்ச்சி உடையணிந்து வந்த ஸ்ரேயா, இரண்டாவது நாளான நேற்று கருப்பு நிற புடவையில் மெழுகுச் சிலையாக வந்து ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டார்.

IMG_4180

ரசிகர் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று அவரது திறன்பேசியில் தம்படம் (செல்ஃபி) எடுத்துக் கொடுக்கின்றார்

IMG_4213

சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்வின் போது தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சைமா போன்ற விருதுகள் நடிகர்களின் திறமையை எடுத்துக் கூறும் ஒரு மிகப் பெரிய அங்கீகாரம் என்று ஸ்ரேயா தெரிவித்தார்.

IMG_4208

உலகெங்கும் உள்ள தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளையும் முன்கூட்டியே ஸ்ரேயா தெரிவித்துக் கொண்டார்.

– செல்லியலின் பிரத்தியேகப் படங்கள்

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)