நியூயார்க், மார்ச் 5- உலகப் பெரும் பணக்காரர்களை அவர்களின் சொத்து மதிப்பின்படி பட்டியலிடும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை இந்த ஆண்டின் பணக்காரர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது.
இப்பட்டியலின்படி, 21.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய சொத்துகளை வைத்திருக்கும் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தை தொடர்ந்து 6வது ஆண்டாக தக்கவைத்துக்கொண்டுள்ளார். உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 22வது இடத்தையும் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.
அவரையடுத்து, 16.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துகளுடன் லட்சுமி மிட்டல் இரண்டாம் இடத்தை கைப்பற்றியுள்ளார்.
உலகின் முதல் பணக்காரராக மெக்சிகோவின் தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம் 73 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அடுத்தப்படியாக, மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ் 57 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.