Home இந்தியா முதல்வர் பன்னீர் செல்வம் தமிழகத்தின் அவமானம் – இளங்கோவன் சாடல்!

முதல்வர் பன்னீர் செல்வம் தமிழகத்தின் அவமானம் – இளங்கோவன் சாடல்!

702
0
SHARE
Ad

O-Panneerselvamசென்னை, ஏப்ரல் 18 – முதலமைச்சர் பன்னீர் செல்வம் தமிழ் நாட்டின் அவமானம் என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சாடியுள்ளார்.

தனியார் வார இதழ் ஒன்றிற்கு இளங்கோவன் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தின் தற்போதய முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

“பன்னீர் செல்வம் ஒரு மௌன சாமியார். தமிழக முதல்வர் என்ற வார்த்தை ஜாலங்களைத் தாண்டி இவர் வெறும் செயல்படாத முதல்வராகவே இருக்கிறார். ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு அமைதியாகிவிட்டார். மொத்தத்தில் பன்னீர் செல்வம் தமிழகத்தின் அவமானம்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், ஜெயலலிதா குறித்த கேள்விக்கு, “ஜெயலலிதா ஓர் ஊழல் பேர்வழி. அதிமுக ஊழல் செய்வதற்காகவே உருவான கட்சி” என்றும் விமர்சித்துள்ளார்.