Home நாடு போர்ட்டிக்சன் இராணுவ மையத்தில் பரவிய மர்ம காய்ச்சல்!

போர்ட்டிக்சன் இராணுவ மையத்தில் பரவிய மர்ம காய்ச்சல்!

681
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 18 – போர்ட்டிக்சனில் உள்ள இராணுவ பயிற்சி மையத்தில், இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு இராணுவ வீரர்களுக்கு மூளை நரம்பு வீக்கம் அடைந்துள்ளதோடு (meningoencephalitis), மேலும் 10 பேர் இந்த திடீர் உடல்நலக்குறைவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

img524a539460a74

#TamilSchoolmychoice

இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த தீடீர் உடல்நலக்குறைவின் காரணத்தை ஆய்வு செய்து வருவதோடு, மற்றவர்களுக்கும் இது பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அண்மையில், ஒரே அறையில் தங்கியிருந்த இந்த இரு இராணுவ வீரர்களும் கடுமையான காய்ச்சலாலும், உடல் வலியாலும் பாதிக்கப்பட்டு இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.

ஆனால் தொடர்ந்து இந்த காய்ச்சல் முற்றியதால், கடந்த ஏப்ரல் 14-ம் தேதி, போர்ட்டிக்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அதில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும், மற்றவர்கள் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.