பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டி வைத்தார். பின்னர், நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:- “அம்பேத்கர், சமூகத்தை இணைப்பதில் நம்பிக்கை கொண்டவர். பிரிப்பதில் அல்ல. அவர் எனக்கு உந்துசக்தியாக திகழ்ந்து, நான் பிரதமர் ஆவதற்கு காரணமாக இருந்தார்”.
“அவரால்தான் அரசியலில் இன்றைய உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன்.
அம்பேத்கர் இல்லாவிட்டால், நான் எங்கு இருந்திருப்பேனோ? இதை நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன். இத்தகைய உந்துசக்தி மனிதரை பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்”.
“அதனால்தான், தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. தேர்தல் ஆணையம், நிதி ஆணையம் போன்ற அரசியல் சட்ட அமைப்புகளை உருவாக்கினார். இன்றும் இவற்றின் மீது மக்கள் ஆழ்ந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்னவென்றால், எல்லோருக்கும் கல்வி அளிப்பதுதான்”.
“ஆனால், அவர் படைத்த அரசியல் சட்டத்தில் தனது பாதிப்புகளை அவர் இடம்பெறச் செய்யவில்லை. அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை கீற்றாக திகழ்ந்தார்” என பிரதமர் மோடி பேசினார். இந்நிகழ்ச்சியில், மத்திய மந்திரிகள் தாவர் சந்த் கெலாட், கிருஷ்ணன் பால், விஜய் சம்ப்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.