கோலாலம்பூர், ஏப்ரல் 22 – மலேசிய சட்டப்படி, மலேசிய ஆண்களை திருமணம் புரிந்துகொள்ளும் வெளிநாட்டு பெண்களுக்கு மட்டும் மலேசிய குடியுரிமை வழங்கப்படுகிறது.
அந்த வகையில், கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 2,374 இந்திய நாட்டினர் உட்பட 16,702 வெளிநாட்டினருக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜஃபார் நேற்று அறிவித்தார்.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 5,992 பேர், இந்திய நாட்டினர் 2,374 பேர், தாய்லாந்திலிருந்து 1,409 பேர், மற்ற நாடுகளைச் சேர்ந்த 6,927 பேர் அவர்களில் அடங்குவர் என அவர் குறிப்பிட்டார்.
மலேசிய ஆண்களை சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் பெண்கள், குறைந்தது இரண்டாண்டுகள் இங்கு தங்கியிருந்த பிறகே, அவர்களுக்கான குடியுரிமை விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படுகிறது என்றும் வான் ஜுனாய்டி ல்விளக்கமளித்தார்.