Home நாடு அமெரிக்க வாழ் மலேசியருக்கு புலிட்சர் விருது!

அமெரிக்க வாழ் மலேசியருக்கு புலிட்சர் விருது!

501
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 23 – அமெரிக்காவில் வசித்து வரும் மார்க்கஸ் யாம் (வயது 30) என்ற மலேசியர், புலிட்சர் விருது பெற்ற குழுவில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.

புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு அகியவற்றில் சிறந்தவைகளுக்காக அமெரிக்காவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு உயரிய விருதாகும்.

10593038_10102031605947348_4327674745477649241_n

#TamilSchoolmychoice

(மார்க்கஸ் யாம் படம்: பேஸ்புக்)

இது நியூயார்க் நகரத்தில், கொலம்பியா பல்கலைக்கழகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

மலேசியாவில் கோலாலம்பூரில் பிறந்தவரான மார்க்கஸ், அமெரிக்காவில் ‘தி சீட்டில் டைம்ஸ்’ என்ற செய்தி நிறுவனத்தில் ஆசிரியர்கள் குழுவில் ஒருவராகவும், புகைப்பட பத்திரிக்கையாளராகவும் பணியாற்றி வருகின்றார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் வாஷிங்டன் நகரில் ஓஸோ என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 43 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த செய்தியை உடனடியாக அவசர செய்தியாக வெளியிட்டு பொதுமக்களுக்கு உடனடி தகவல் அளித்ததற்காக ‘தி சீட்டில் டைம்ஸ்’ செய்தி நிறுவனத்திற்கு 2015-ம் ஆண்டின் ‘அவசர செய்தி’ பிரிவில் புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.