Home உலகம் 2014 ‘புலிட்சர்’ விருது அமெரிக்கா வாழ் இந்தியர் விஜய் சேஷாத்திரி பெற்றார்.

2014 ‘புலிட்சர்’ விருது அமெரிக்கா வாழ் இந்தியர் விஜய் சேஷாத்திரி பெற்றார்.

671
0
SHARE
Ad

ஏப்ரல் 15 – 2014 ஆம் ஆண்டுக்கான கவிதை பிரிவுக்கான புலிட்சர் விருது அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் சேக்ஷாத்திரிக்கு (படம்) வழங்கப்பட்டுள்ளது.

Vijay Sheshadri 440 x 215கவிதை, இசை, நாடகம் மற்றும் பத்திரிகை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும்  புலிட்சர்விருதுகள் வழங்கப்படுகின்றன.

#TamilSchoolmychoice

ஆங்கில எழுத்துத் துறையில் பெருமைக்குரிய விருதுகளாக புலிட்சர் விருதுகள் கருதப்படுகின்றன.

அதன்படி இந்த முறை 98வது ஆண்டாக வழங்கப்படும் புலிட்சர் விருதுகளில் கவிதை பிரிவுக்கான விருது அமெரிக்க வாழ் இந்தியரானவிஜய் சேஷாத்திரி எழுதிய ‘3 செக்க்ஷன்ஸ்‘ (“3 Sections”) என்ற கவிதைநூலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புலிட்சர் பரிசை பெறும் 5 வது இந்தியர் விஜய் சேஷாத்திரி என்பதுகுறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் பிறந்தவர்…

 அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் படித்தவரான விஜய் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவராவார். தற்போது நியூயார்க்கில் உள்ள சாரா லாரன்ஸ் கல்லூரியில் கவிதை மற்றும் எழுத்துத் துறையை போதிக்கும் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார்.

தனது 5வது வயதில் அமெரிக்கா வந்தவர் ஓஹையோ மாநிலத்தின் கொலம்பஸ் நகரில் ஆரம்பக் கல்வியைப் பெற்று வளர்ந்தார்.

புலிட்சர் விருதின் மூலம் 10,000 அமெரிக்க வெள்ளியை விஜய் பரிசாகப் பெறுவார்.