Home உலகம் 7வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அபுதாபியில் இன்று தொடங்குகின்றன

7வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அபுதாபியில் இன்று தொடங்குகின்றன

563
0
SHARE
Ad

IPL 7 logo - 440 x 215அபுதாபி, ஏப்ரல் 16 – வரலாறு காணாத நெருக்கடியான, கடும் போட்டிகளைக் கொண்ட பொதுத் தேர்தலை இந்தியா சந்தித்துக் கொண்டிருந்தாலும் கிரிக்கெட் மோகம் மட்டும் மக்களை விடுவதில்லை.

#TamilSchoolmychoice

அந்த வகையில் ஆண்டு தோறும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் (Indian Premier League) எனப்படும் இந்திய நகர்களை மையமாகக் கொண்ட தனியார் குழுக்களுக்கிடையிலான 20:20 கிரிக்கெட் போட்டிகள் இன்று ஐக்கிய ஐக்கிய அரபு நாடுகளில் ஆரம்பமாகவுள்ளன.

இப்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் 7வதுஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த பாதுகாப்புத் தர முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்திருந்தது.

இதை அடுத்து ஐபிஎல் முதற்கட்டப் போட்டிகளை ஐக்கிய அரபு நாடுகளில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது. இதனைத தொடர்ந்து இன்று அபுதாபியில் ஐபிஎல் முதல் போட்டி மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

பொதுத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அபு தாபியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் எளிமையான ஏற்பாட்டுகளுடன்  ஐபிஎல் போட்டிகளின் துவக்க விழா இன்று நடைபெற உள்ளது.

இந்தியாவிற்கு வெளியே ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும்.

ஏற்கனவே 2009ஆம் ஆண்டு இதே போன்று பொதுத் தேர்தல்களும் அதனால் ஏற்பட்ட பாதுகாப்பு சிக்கல்களும் குறுக்கிட்டதால், அந்த ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிற்கு வெளியே தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.