Home உலகம் பணிப்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்த மன்னிப்பு கேட்ட நியூசிலாந்து பிரதமர்!

பணிப்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்த மன்னிப்பு கேட்ட நியூசிலாந்து பிரதமர்!

574
0
SHARE
Ad

John Key,நியூசிலாந்து, ஏப்ரல் 23 – உணவகத்தில் பணிப்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்ததற்காக நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ (John key) அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் ஜான் கீயின் வீட்டுக்கு அருகே உள்ள உணவகத்தில் வேலை செய்யும் பணிப்பெண், பிரதமரை பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது; “கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து கடந்த மாதம் வரை, பிரதமர் ஜான் கீ எங்கள் உணவகத்திற்கு வருவார்”.

“அவர் வரும்போதெல்லாம் என் தலைமுடியை பிடித்து இழுத்தார். அவர் விளையாட்டாக செய்கிறார் என எண்ணி நான் ஒன்றும் சொல்லாமல் இருந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து இவ்வாறே செய்து வந்ததால், நான் பாதுகாவலர்களிடம் இது பற்றி கூறினேன்”.

#TamilSchoolmychoice

“எனினும் பலனில்லாமல் போனது. இதனால் அவர் மீண்டும் என் தலைமுடியை பிடித்து இழுத்தபோது, அவர் கையை தட்டி விட்டேன். இதற்கு மேலும் இவ்வாறு செய்தால் நான் அடித்துவிடுவேன் என கூறினேன். மேலும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் அழுதுவிட்டேன்”.

“இதன்பின் எங்களது உணவகத்திற்கு வந்த அவர், தனது தோட்டத்தில் தயாரிக்கப்பட்ட 2 ஒயின் பாட்டில்களை என்னிடம் கொடுத்து, நான் வேண்டும் என செய்யவில்லை என மன்னிப்பு கேட்டார்” என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜான் கீ அப்பெண்ணிடம் வேண்டுமென்றே அவ்வாறு நடந்துக் கொள்ளவில்லை என்றும் விளையாட்டாக செய்தார், அதற்கு மன்னிப்பும் கேட்டார்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.