Home தமிழ் சூர்யாவின் ‘மாஸ்’ பட முன்னோட்டம் வெளியானது!

சூர்யாவின் ‘மாஸ்’ பட முன்னோட்டம் வெளியானது!

574
0
SHARE
Ad

massசென்னை, ஏப்ரல் 25 – வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் ‘மாஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் இன்று காலை வெளியானது.

அஞ்சான் தோல்விக்குப் பிறகு, வெங்கட்பிரபு கூறிய ஃபேண்டஸி த்ரில்லர் கதை சூர்யாவிற்கு பிடித்துப் போக, உடனடியாக தொடங்கப்பட்ட படம் தற்போது திரைக்கு வர காத்திருக்கிறது. மாஸ் படத்தில் சூர்யா, நயன்தாராவுடன் சமுத்திரக் கனி, பார்த்திபன், பிரேம்ஜி மற்றும் பிரணிதா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

மே மாதம் 15-ம் தேதி, கோடை விடுமுறையைக் குறி வைத்து வெளியாகவிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் தனது மாஸை மீண்டும் நிலைநாட்டும் என்று சூர்யா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

 ‘மாஸ்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே காணலாம்: