Home தொழில் நுட்பம் படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!

படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!

603
0
SHARE
Ad

how-old2கோலாலம்பூர், மே 2 – “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பது பழமொழி. இனி, “வயதின் அளவும் முகத்தில் தெரியும்” என்பது மைக்ரோசாப்ட்டின், ஹவ்-ஓல்ட் தளத்திற்கான புது மொழி. ‘மைக்ரோசாப்ட் பில்ட் 2015’ (Microsoft Build 2015) நிகழ்வை கொண்டாடிவரும் அந்நிறுவனம், நித்தமும் தங்களின் ஆய்வுகள் மற்றும் தயாரிப்புகள் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றது.

அந்த வரிசையில் மைக்ரோசாப்ட்டின் புதிய வரவு ‘ஹவ்-ஓல்ட்’ (How-Old) வலைத்தளம். இந்த வலைத்தளத்தில், நீங்கள் உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்த சில நொடிகளில் வயது என்ன என்பதை இந்த தளம் தெரிவித்துவிடும். ‘ப்ராஜெக்ட் ஆக்ஸ்ஃபோர்ட்’ (Project Oxford) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவே, மைக்ரோசாப்ட் இந்த வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது.

how-oldஇந்த வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே இணையவாசிகளிடம், எதிர்பார்க்க முடியாத அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பிட்ட அந்த திட்டத்தின், முழு பணிகளே நிறைவடையாத நிலையில், பயனர்கள் கொடுத்த வரவேற்பு மைக்ரோசாப்ட்டை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

#TamilSchoolmychoice

நீங்களும் உங்கள் புகைப்படத்தைக் கொண்டு, உங்கள் வயதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால், கீழே உள்ள இணையத் தொடர்பைத் தொடரலாம்.

http://how-old.net/