Home உலகம் “இந்திய ஊடகங்களே, நேபாளை விட்டு வெளியேறுங்கள்” – டுவிட்டரில் பரபரப்பு!

“இந்திய ஊடகங்களே, நேபாளை விட்டு வெளியேறுங்கள்” – டுவிட்டரில் பரபரப்பு!

486
0
SHARE
Ad

IndianMediaகாட்மாண்டு, மே 4 – நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் அத்துமீறி வருவதாகவும், இந்தியா செய்யும் உதவிகளை முன்னிலைப் படுத்தியே செய்தி வெளியிட்டு வருவதாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கென, டுவிட்டரில் ‘இந்திய ஊடகங்களே வெளியேறுங்கள்’ (#GoHomeIndianMedia) என்ற தகவல் பரிமாற்ற குழு (ஹேஷ் டேக்) ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே புரட்டிப் போட்டது. 7000-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள இந்த பேரிடரில், பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலநடுக்கம் குறித்து தகவல் வெளியான சில மணி நேரங்களில் இந்தியா, முதல் ஆளாக தனது மீட்புப் படைகளை அங்கு அனுப்பியது. அதன் பின்னர் பிற நாடுகளும், தங்கள் படைகளை அனுப்பி மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

நிலநடுக்க பாதிப்புகள் பற்றியும், மீட்புப் பணிகள் குறித்து உடனுக்குடன் செய்தி வெளியிட பன்னாட்டு ஊடகங்கள் நேபாளுக்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் தான் இந்தியா ஊடகங்களுக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதன் பிரதிபலிப்பே டுவிட்டர் போன்ற ஊடகங்களில் வெளியாகின.

இந்திய ஊடகங்கள் தங்கள் நாட்டின் உதவிகளை பிரகனப்படுத்தவே இங்கு வந்துள்ளன. அத்துடன் சரியான நிலவரங்களை வெளிப்படுத்தாமலும், மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாகவும் நடந்துகொள்கின்றன என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. அதற்கான புகைப்படச் சான்றுகளையும் டுவிட்டர் பயனர்கள் பதிவேற்றி உள்ளனர்.

இதற்கிடையே இவையனைத்தும் பாகிஸ்தானின் வேலை என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். நிலநடுக்கம் காரணமாக அடிப்படை வசதிகள் கூட பெற முடியாமல் தவித்து வரும் நேபாளிகள் எவ்வாறு டுவிட்டரை பயன்படுத்த முடியும். இந்தியா செய்து வரும் உதவிகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் தான் இத்தகைய எதிர்ப்புகளை உருவாக்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.