Home உலகம் லக்வி விவகாரம்: இந்தியாவின் கோரிக்கையை ஏற்றது ஐநா! 

லக்வி விவகாரம்: இந்தியாவின் கோரிக்கையை ஏற்றது ஐநா! 

510
0
SHARE
Ad

terarist lakviஜெனிவா, மே 4 – மும்பைத் தாக்குதல் தீவிரவாதி ஜாகிர் ரஹ்மான் லக்வி விடுதலை செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த இந்தியா, இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் செயல்பாடு குறித்து விசாரிக்குமாறு ஐநா-விடம் முறையிட்டது. இந்நிலையில், இந்தியாவின்  கோரிக்கையை ஐநா ஏற்றுக்கொண்டது.

கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி தான் ஜகியூர் ரஹ்மான் லக்வி. மும்பைத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் தொடர் வற்புறுத்தலால், லக்வியை பாகிஸ்தான் அரசு கடந்த சில வருடங்களுக்கு முன்பு கைது செய்தது.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்த லக்வியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. அதன்படி லக்வியும் விடுதலை செய்யப்பட்டான்.

#TamilSchoolmychoice

உலக நாடுகளின் கண்டனத்தையும் மீறி பாகிஸ்தான் செயல்பட்டவிதம், இந்தியாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இந்தியாவை, பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் லக்வி விடுதலை அரங்கேறியது, எனவே இந்த விவகாரத்தில் ஐநா  பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் தலையீடு வேண்டும் என கோரிக்கை வைத்தது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் இந்தியாவின் இந்த கோரிக்கைக்கு ஆதரவு அளித்தன.

இந்தியாவின் இந்த கோரிக்கையை ஐநா பாதுகாப்பு குழு ஏற்றுக் கொண்டுள்ளது. லக்வி விவகாரத்தை அடுத்த கூட்டத்திலேயே விவாதிக்க பாதுகாப்பு குழு முடிவு எடுத்துள்ளது. லக்வி விவகாரத்தில் இந்தியாவின் முதல் வெற்றியாக இது எனக் கருதப்படுகிறது.