Home தமிழ் ரஞ்சித் படம் பற்றி அதுக்குள்ள எப்படி? – ரஜினி காட்டம்!

ரஞ்சித் படம் பற்றி அதுக்குள்ள எப்படி? – ரஜினி காட்டம்!

580
0
SHARE
Ad

Rajinikanthசென்னை, மே 7 –  நவீன காலத்தில் ஊடகங்களின் புரட்சி சொல்லிமாளாது அதுவும் சினிமாத் துறையில் தற்போது எந்தவொரு ரகசியத்தையும் காக்க முடியாது. இந்த ஆதங்கத்தை தான் ரஜினியும் கொட்டித் தீர்த்திருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்ற தகவல் தமிழ் ரசிகர்களை மட்டுமல்ல, கோடம்பாக்கத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இரண்டு படங்களே இயக்கி உள்ள ஒரு இளம் இயக்குனர் என்ன கதை சொல்லி ரஜினியை ஈர்த்தார், ஒருவேளை வழக்கம் போல் வதந்தியாக இருக்குமோ என்ற குழப்பம் நீடித்த நிலையில், அந்த தகவல் உண்மை தான் என்று சம்மந்தப்பட்டவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது புதிய படம் பற்றிய தகவல் கசிந்ததில் ரஜினி அதிர்ச்சி அடைந்துள்ளதாக புதிய செய்தி கிளம்பி உள்ளது. மேலும் அவர், இந்த தகவலை வெளியிட்டவர்கள் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

#TamilSchoolmychoice

திரைக்கதையை முழுமையாக முடித்துவிட்டு படப்பிடிப்பிற்கு கிளம்புகின்ற சமயத்தில் இது பற்றி அறிவித்திருக்கலாமே, அதற்குள் எதற்காக இந்த தகவலை வெளியிட்டார்கள் என்பதே ரஜினியின் கோபத்திற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

எனினும் தயாரிப்பாளர் தரப்பு, ஊடகங்கள் பல வழிகளில் பெருகி விட்ட இந்த காலத்தில் எந்த செய்தியையும் மறைத்து வைக்க முடியாது என்று கூறி ரஜினியை சமாதானம் செய்துள்ளது.