Home நாடு பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: குறைந்த பெரும்பான்மையில் வான் அசிசா வெற்றி!

பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: குறைந்த பெரும்பான்மையில் வான் அசிசா வெற்றி!

796
0
SHARE
Ad

பெர்மாத்தாங் பாவ், மே 7 – இன்று நடைபெற்ற பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பிகேஆர் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் டத்தோ வான் அசிசா வான் இஸ்மாயில் 8,841 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்று தொகுதியைத் தக்க வைத்துள்ளார்.

13478_582125415224072_4279986512981054437_n

வான் அசிசா பெற்ற மொத்த வாக்குகள்  30,316 ஆகும்.

#TamilSchoolmychoice

வான் அசிசாவை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர்  சுஹைமி சாபுடின் 21,475 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் சாலே இஷாக் 367 வாக்குகளும், பிஆர்எம் கட்சி வேட்பாளர் அஸ்மான் ஷா ஓத்மான் 101 வாக்குகளும் பெற்று தோல்வியுற்றனர்.

பெர்மாத்தாங் பாவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஓரினப்புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றதையடுத்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது.

கடந்த 2013-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிகேஆர் ஆலோசகரான அன்வார் இப்ராகிம் இத்தொகுதியில் 11,721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அன்வாருக்கு 37,090 வாக்குகளும், தேசிய முன்னணியின் மஸ்லான் இஸ்மாயிலுக்கு 25,369 வாக்குகளும் கிடைத்தன.