பெர்மாத்தாங் பாவ், மே 7 – தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததன் படி, இன்று காலை 8 மணியளவில் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் தொடங்கியது.
காலை 9 மணி நிலவரப்படி, அத்தொகுதியில் 11.3 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது 8119 பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. இம்முறை தேசிய முன்னணி, பிகேஆர், பிஆர்எம் ஆகிய மூன்று கட்சிகள் களம் இறங்கியுள்ளன. மேலும் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் போட்டியிடுகிறார்.
பிகேஆர் சார்பில் அக்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா களம் இறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து தேசிய முன்னணியின் சுஹைமி சாபுடின், பிஆர்எம்மின் அஸ்மான் ஷா ஓத்மான் மற்றும் சுயேச்சை வேட்பாளர் சாலே இஷாக் ஆகிய மூவரும் போட்டியிடுகின்றனர்.
மேலும் செய்திகள் தொடரும்..