Home கலை உலகம் சல்மான் கான் தண்டனை குறித்து ஷாருக்கான், ஹன்சிகா உட்பட சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி!

சல்மான் கான் தண்டனை குறித்து ஷாருக்கான், ஹன்சிகா உட்பட சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி!

702
0
SHARE
Ad

salman_khan_239662_2396624fமும்பை, மே 7 – மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதற்காக சல்மான் கான் தனது வீட்டில் இருந்து நீதிமன்றத்திற்கு வந்தார்.

நேற்று இரவு அவரது வீட்டிற்கு  வந்த நடிகர் ஷாருக்கான் சென்று அவருக்கு நம்பிக்கையும் ஆதரவும் தெரிவித்தார். இன்று  நடிகை ஹேமாமாலினி; “அவரது தண்டனைக்கு வருந்துவதாகவும், ஆனால் சட்டத்திற்கு மதிப்பளிப்பதாகவும் கூறினார். மேலும்  சல்மான் கானுக்கு குறைந்த அளவு தண்டனையே கிடைக்க கடவுளை பிரார்த்திப்பதாக” கூறினார்.

சல்மான் கான் நடித்த ‘தபாங்’ படத்தில் நடித்து இந்தி சினிமாவில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார். இந்த நிலையில் சல்மான் கான் வழக்கு குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் சோனாக்ஷி.

#TamilSchoolmychoice

அதில் அவர் கூறியிருப்பதாவது: “மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி. சல்மான் கானுக்கு ஆதரவாக இருப்போம் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. சல்மான் கான் நல்ல மனிதர். அந்த குணத்தை அவரிடமிருந்து யாரும் எடுக்க முடியாது” என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார் சோனாக்ஷி.

நடிகை ஹன்சிகா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இதயமே நொறுங்கியது போல உள்ளது. பேச வார்த்தை இல்லை. சல்மான் கான் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

நடிகர் ரிஷி கபூர் வெளியிட்டுள்ள டுவிட்டில்; “இந்த கடினமான நேரத்தில் கான்களுடன் கபூர் குடும்பம் இருக்கிறது. காலம்தான் மிகச் சிறந்த நிவாரணி. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

இயக்குனர் கரண் ஜோகர் தனது டுவிட்டரில்; “நான்  இப்போது உணர்வு பூர்வமாக மட்டும் தான் பதிலளிக்க முடியும். என் எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகளை சல்மான் மற்றும் அவரது குடும்பம் மன வலிமை பெற விரும்புகிறேன்” என்றார்.

நடிகர் ரித்திஷ் தேஷ் முக் தனது கூறி இருப்பதாவது:- “நீதி மன்ற தீர்ப்பை விமர்சிக்க கூடாது. ஆனால் எனது இதயம் வெளியே வந்து விட்டது. இந்த துறையில்  நான் சந்தித்தவர்களில் பெரிய மனம் படைத்தவர், சிறந்தவர் சல்மான் கான்” என  கூறி உள்ளார்.