Home இந்தியா திடீர் போர் வந்தால், இந்தியாவின் நிலைமை படுமோசமாகும் – சிஏஜி அறிக்கை!

திடீர் போர் வந்தால், இந்தியாவின் நிலைமை படுமோசமாகும் – சிஏஜி அறிக்கை!

576
0
SHARE
Ad

indiaபுதுடெல்லி, மே 10 – இந்தியா, திடீர் போர் ஒன்றை சந்திக்க நேர்ந்தால், ஆயுதத் தட்டுப்பாடு காரணமாக படுமோசமான நிலைமைக்கு தள்ளப்படும் என மத்திய தலைமை கணக்கு தணிக்கை அமைப்பான சிஏஜி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய இராணுவத்தில் தற்போது உள்ள வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை வைத்து 15 முதல் 20 நாட்கள் வரை மட்டுமே போரிட முடியும். 170 வகையான வெடிமருந்துகளில் 125 வகை வெடிமருந்துகள் 20 நாட்களுக்கு மட்டுமே உள்ளன”

“50 சதவீத வெடிமருந்துகள் சுமார் 10 நாட்களுக்கு மட்டுமே வரும். இந்நிலையில், நாம் கடுமையான போர்களை சந்திக்கவே முடியாது. 40 நாட்களுக்கு தேவையான வெடிமருந்துகளை மட்டுமே இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.”

#TamilSchoolmychoice

“அதுமட்டுமல்லாமல், நமது விமானம் தாயாரிக்கும் திட்டமான தேஜாஸ், சுமார் 30 ஆண்டுகள் பழமையானது. தற்போதய நிலையில், அந்த திட்டம் பெரிய அளவில் பலன் தராது. அந்த திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட விமானமும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.”

“நமது இராணுவத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாததற்கு மிக முக்கிய காரணம், இராணுவ தளவாட தொழிற்சாலைகளின் குறைவான உற்பத்தி திறன் தான். இறக்குமதி நடவடிக்கைகளும் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளது.

எனினும், மத்திய உள்துறை அமைச்சகம் சிஏஜி இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.