Home உலகம் முறைகேடு குற்றச்சாட்டில் ராஜபக்சே உதவியாளர் கைது!

முறைகேடு குற்றச்சாட்டில் ராஜபக்சே உதவியாளர் கைது!

405
0
SHARE
Ad

rajapakse2கொழும்பு, மே 13 – அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய புகாரின் பேரில் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற சிறிசேனா, முந்தைய ராஜபக்சே ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் சட்ட விரோத செயல்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

அதன்படி முந்தைய ஆட்சியின் ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய புகாரின் பேரில், ராஜபக்சேவின் நெருங்கிய உதவியாளரான சஜின் வாஸ் குணவர்த்தனே காவல்துறையினர் கைது செய்தனர்.