Home கலை உலகம் ‘மாஸ் பேய் படம் தான்’ – சூர்யா!

‘மாஸ் பேய் படம் தான்’ – சூர்யா!

639
0
SHARE
Ad

mass13சென்னை, மே 13 – இயக்குநர் வெங்கட்பிரபு படம் என்றாலே இளைஞர்களை மையப்படுத்திய  கலகலப்பான படமாகவே இருக்கும். அதிலிருந்து வேறுபட்ட படமாக உருவாகியிருக்கிறதாம் சூர்யா நடித்த ‘மாஸ்’ படம்.

சூர்யா, நயன்தாரா நடிப்பில் மே 29-ஆம் வெளியாகவிருக்கிறது என படக்குழுவினர்கள் தெரிவித்தனர்.  படத்தைப் பற்றி சூர்யா கூறியதாவது, “இந்தப்படத்தில் சிகரெட், மது அருந்துவது போன்ற காட்சிகள் இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது”.

“குழந்தைகளை பாதிக்காத படம் தான் ‘மாஸ்’. அதென்ன படத்தின் பெயர் “மாஸ்” அப்படினு கேட்டீங்கனா?, இந்தப் படத்ந்தில்என் பெயர் மாசிலாமணி, என்னை எல்லோரும் செல்லமா மாஸ் என கூப்பிடுவார்கள். அதுனால் தான் படத்தின் பெயரும் ‘மாஸ்’.”

#TamilSchoolmychoice

Untitled“அதுமட்டுமல்லாமல் இதுவரைக்கும் 40-க்கும் மேற்பட்ட ‘பேய்’ படங்கள் தமிழில் வந்துவிட்டது. ஆனால் இந்தப்படம் கொஞ்சம் வித்தியாசமாகவும், எல்லோருக்கும் பிடிக்கும் விதத்திலும் இருக்கும்”  என்று கூறினார் சூர்யா.