Home கலை உலகம் ‘மாஸ்’ படம் இணையத்தளத்தில் வெளியீடு – படக்குழுவினர் அதிர்ச்சி!

‘மாஸ்’ படம் இணையத்தளத்தில் வெளியீடு – படக்குழுவினர் அதிர்ச்சி!

713
0
SHARE
Ad

???????????????????????????????????????????? சென்னை, மே 29 – சூர்யா நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கும் படம் ‘மாஸ் என்கிற மாசிலாமணி’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். நயன்தாரா, சமுத்திரகனி, பார்த்திபன், பிரேம்ஜி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் இன்றுதான் இந்தியாவில் வெளியாகிறது. இருப்பினும், வெளிநாடுகளில் இப்படம் நேற்றே திரையிடப்பட்டது. இந்நிலையில், ‘மாஸ்’ முழுப்படத்தையும் யாரோ இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளாராம்.

திரையரங்கில் இருந்து படத்தை மறைமுகமாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனராம். இந்தியாவில் வெளியாவதற்கு முன்பாகவே இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளிவந்துள்ளது ‘மாஸ்’ படம்.

#TamilSchoolmychoice

இப்படம் வெளியானது குறித்து ‘மாஸ்’ படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, அந்த இணையதளங்களை முடக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனராம் படக்குழுவினர்கள்.