Home கலை உலகம் சூர்யாவின் ‘மாஸ்’ படம் ‘மாஸ் என்ற மாசிலாமணி’யாக பெயர் மாற்றம்!

சூர்யாவின் ‘மாஸ்’ படம் ‘மாஸ் என்ற மாசிலாமணி’யாக பெயர் மாற்றம்!

668
0
SHARE
Ad

Mass 1சென்னை, மே 25 – வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘மாஸ்’ படம் வரும் (மே) 29-ஆம் தேதி வெளியா உள்ளதாக படக்குழு தெரிவித்திருக்கின்றனர். இதுவரை இல்லாமல் இன்றைக்குத் திடீரென இந்தப்படத்தின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இதுவரை ‘மாஸ்’ என்று மட்டுமே போட்டு விளம்பரம் செய்துகொண்டிருந்தார்கள். இப்போது ‘மாஸ்’ என்கிற எழுத்துக்குக் கீழே சின்ன எழுத்துகளில், ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ என்று எழுதியிருக்கிறார்கள்.

இவ்வளவு நாட்களாக இல்லாமல் ஏன் இந்தத் திடீர் மாற்றம்? என்றதற்கு, படத்துக்குத் தணிக்கைத்துறையில் ‘யு ‘சான்றிதழ் கொடுத்துள்ளனர். ‘யு’ சான்றிதழ் கிடைத்தால் அடுத்தது வரிவிலக்குக்கு விண்ணப்பம் செய்யவேண்டும்.

#TamilSchoolmychoice

வரிவிலக்குக்குப் போகவேண்டுமென்றால் படத்தின் பெயர் தமிழில் இருக்கவேண்டும் என்பது கட்டாயம். வரிவிலக்குக்கு விண்ணப்பம் செய்வதற்காகவே திடீரென ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ என்று சேர்த்திருக்கிறார்கள் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

பெயர் வைக்கும்போதே இதுபற்றித் தெரியாதா? என்று கேட்டால், இது பேய்ப்படம். பொதுவாகப் பேய்ப்படங்களுக்கு ‘யு’ சான்றிதழ் கிடைக்காது என்று நினைத்து இவ்வாறு வைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் படம் உருவாக்கத்தின் போது படத்தில் பயப்படும்படியான காட்சிகளை மிகவும் குறைத்துவிட்டார்களாம்.

இதுபற்றி இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் கூறியதாவது; “படத்தில் சூர்யா பெயர் மாசிலாமணி அவரை எல்லோரும் மாஸ் என்று கூப்பிடுவார்கள். அதைத்தான் பெயராக வைத்திருந்தோம்”.

“வரிவிலக்குக் கேட்டுப்போனபோது தலைப்பிலும் அந்தப்பெயர் முழுமையாக இருக்கவேண்டும் என்று சொன்னதால் சேர்த்திருக்கிறோம், குழந்தைகளும் விரும்பிப் பார்க்கின்ற படமாக வந்திருக்கிறது” என்றார் அவர்.