Home கலை உலகம் சூர்யாவின் ‘மாஸ்’ 1,500 திரையரங்குகளுக்கு மேல் நாளை வெளியீடு!

சூர்யாவின் ‘மாஸ்’ 1,500 திரையரங்குகளுக்கு மேல் நாளை வெளியீடு!

759
0
SHARE
Ad

Suriyas-Mass-_-Tamil-Movie-Posterசென்னை, மே 28 – சூர்யாவின் ‘மாஸ்’ படம் நாளை (29-ம் தேதி) உலகம் முழுவதும் 1500 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகவிருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரணிதா, பிரேம்ஜி அமரன், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘மாஸ்’ படம்.

படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. இப்படம் ‘பேய்’ படம் என ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவில் சூர்யா கூறியுள்ளதால் மக்களிடையே, இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இப்படம் உலக முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இன்று இரவு 9.00 மணிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice