உடல் உள் உறுப்புகளிலும் தோலிலும் ஏற்படும் புற்று நோய்கள் பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. சளிக்கு காரணமான வைரஸ் கிருமிகள், உயிருக்கு ஆபத்து விளைவிக்காதவை.
இவற்றை மரபணு மாற்றத்தின் மூலமாக புற்று நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் வகையில் விஞ்ஞானிகள் மாற்றியிருக்கிறார்கள்.
“வைரஸ் இம்யுனோதெரபி” எனப்படும் இச்சிகிச்சை முறையில் மரபணு மாற்றம் பெற்ற வைரஸ், இரண்டு வழிகளில் புற்று நோயை எதிர்த்து போராட உதவுகிறது. முதலாவதாக புற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகளில் தங்கி அவற்றை அழிக்கிறது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள புற்று நோய்க்கான சிகிச்சைகளுடன், இச்சிகிச்சை இணைந்து அளிக்கப்படும் போது நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள், “வைரஸ் இம்யுனோ தெரபி”-க்கு உட்படுத்தப்பட்ட தோல் புற்று நோயாளிகளிடம், நோயின் தாக்கம் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். எதிர்காலத்தில் இது புற்று நோய்க்கு மிகச் சிறந்த மாற்றுச் சிகிச்சையாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.