Home இந்தியா 45 ஆயிரம் பேருடன் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் மோடி!

45 ஆயிரம் பேருடன் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் மோடி!

654
0
SHARE
Ad

modiyogaபுதுடெல்லி, மே 29 – அடுத்த மாதம் ஜூன் 21–ஆம் தேதி அனைத்துலக யோகா தினமாக ஐ.நா. அறிவித்தது.  இந்தியாவின் பாரம்பரியமான யோகா கலையை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற பிரதமர்  மோடியின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா. இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இதற்கிடையே இந்தியர்களிடம்  யோகா கலையை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.  அதற்காக அவர் தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி உள்ளது  குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் 21–ஆம் தேதி உலக யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் மிகப்பெரிய யோகா நிகழ்ச்சிக்கு பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

யோகாவை பிரபலப்படுத்த  இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக தெரிகிறது. டெல்லி ராஜபாதையில் ஜூன் 21–ஆம் தேதி காலை 7 மணிக்கு இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

35 நிமிடங்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், சூரிய நமஸ்காரம், சக்கரா சனம், நடராஜசனம், வத்யாசனம், பத்மாசனம், சித்தாசனம், வஜ்ராசனம், ஹலாசனம், சர்வங்காசனம், புஜங்காசனம், சலபாசனம் ஆகிய யோகாசனங்கள் செய்யப்படும் என்றும்  அரசு இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த யோகாசனங்களில் பிரதமர் மோடி எந்தெந்த ஆசனங்களை செய்வார் என தெரியவில்லை.  பிரதமர் மோடி யோகா செய்யும் போது அவருடன் யோகா செய்ய சுமார் 45 ஆயிரம் பேரை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக யோகா தொடர்புடைய அமைச்சரும் தனது ஊழியர்கள் அனைவரும் யோகா நிகழ்ச்சிக்கு தவறாமல் வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மற்ற அமைச்சக ஊழியர்களுக்கும் இது போன்ற அறிவுறுத்தலை வழங்குமாறு யோகா அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. எனவே மத்திய அரசு ஊழியர்கள் மோடியின் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.