Home இந்தியா ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து – அதிர்ஷ்டவசமாக 250 பயணிகள் உயிர் தப்பினர்!

ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து – அதிர்ஷ்டவசமாக 250 பயணிகள் உயிர் தப்பினர்!

832
0
SHARE
Ad

mettupalayam-ooty-trainஊட்டி, மே 29 – ஊட்டி மலை ரயில் எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ரயில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குன்னூரில் இருந்து 250 பயணிகளுடன் மலை ரயில் ஒன்று ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தது.

அருவங்காடு என்ற இடத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் நான்கு சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கின. இதனால் அந்த ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.

Toilet breakஅதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ரயில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 250-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களின்றி உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் மாற்று வாகனம் மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

#TamilSchoolmychoice

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே அதிகாரிகள், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளனதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.