கோலாலம்பூர், மே 29 – “நீங்கள் முடிந்து போன தலைமுறை. ஒதுங்கி இருங்கள். அடுத்த தலைமுறை ஆட்சி செய்ய வழிவிடுங்கள்” என நஜிப் மிகவும் கடுமையாக எச்சரித்தும் கூட, எந்த சலசலப்புக்கும் அஞ்சாத முன்னாள் பிரதமர் துன் மகாதீர், முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவியை விட மோசமான சீர்குலைவை நஜிப் நாட்டிற்கு ஏற்படுத்தி விட்டார் எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
எனவே, ஒரு பிரதமரை அவரது பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பே பதவியை விட்டு விலகிச் செல்லுங்கள் என்று கூறுவது சரிதான் என்றும் மகாதீர் தனது வலைப் பதிவில் எழுதியுள்ளார்.
ஆனால், நஜிப்புக்கு முன்னால் எந்த பிரதமரும் நஜிப் போன்று ஆடம்பரமாக செலவு செய்வதிலும், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தது குறித்தும் சர்ச்சைகள் எழுந்ததில்லை என்றும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
“நஜிப்பின் ஆடம்பரம் குறித்து எழுந்துள்ள சில தகவல்கள் உண்மையில்லாமல் இருக்கலாம். ஆனால் இதற்கு முந்தைய பிரதமர்கள் மீது இத்தகைய ஆடம்பரங்கள் குறித்து குற்றச்சாட்டுகள் இழந்ததில்லை. எனவே 1 எம்டிபி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் படாவியை விட மோசமாக செயல்பட்டுள்ள நஜிப் பதவியை விட்டு விலகியே தீர வேண்டும்” என்றும் தனது கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளார்.