Home உலகம் அமெரிக்க ‘பேஸ் ஜம்ப்’ வீரர் டீன் பாட்டர் சாகச நிகழ்ச்சியின் போது மரணம்!

அமெரிக்க ‘பேஸ் ஜம்ப்’ வீரர் டீன் பாட்டர் சாகச நிகழ்ச்சியின் போது மரணம்!

570
0
SHARE
Ad

imageலாஸ் ஏஞ்சல்ஸ், மே 19 – உலக அளவில் புகழ்பெற்ற ‘பேஸ் ஜம்ப்’ (Base Jump) விளையாட்டில் சாதனை வீரராக திகழ்ந்த அமெரிக்கர் டீன் பாட்டர் (43), சகச நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.  இந்த சம்பவத்தில் அவரது நண்பர் கிராஹம் ஹன்ட்டும்(29) பலியாகி உள்ளார்.

அபாயகரமான சாகச விளையாட்டுகளில் உச்சமாக இருப்பது தான் பேஸ் ஜம்ப். வானுயரக் கட்டிடங்கள், மலைகள் மற்றும் வானத்தில் பறக்கும் விமானம் போன்றவற்றில் இருந்து பாராசூட் உதவியுடன் கீழே குதிப்பது தான் பேஸ் ஜம்ப். நொடியில் மரணம் சம்பவிக்கும் இந்த விளையாட்டில் அசகாய சூரனாக இருந்த டீன் பாட்டருக்கு கடந்த சனிக்கிழமை துரதிருஷ்டவசமான நாளாகிவிட்டது.

கடந்த சனிக்கிழமை டீன் பாட்டரும் அவரது நண்பர் கிராஹம் ஹன்ட்டும் கலிபோர்னியாவில் உள்ள யோஸேமைட் தேசிய பூங்கா பகுதியை ஒட்டியுள்ள மலைப்பகுதியில், விமானத்தில் இருந்து குதிக்க முடிவு செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் பாறைகளில் மோதி உயிரிழந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

யோஸேமைட் தேசிய பூங்கா அதிகாரிகள் விபத்து பற்றி மீட்புக் குழுக்களுக்கு உடனடியாக தகவல் அளித்தனர். எனினும், அவர்களது உடல்கள் ஞாயிற்றுக் கிழமை தான் மீட்கப்பட்டன.

பேஸ் ஜம்ப் விளையாட்டில் தனது வீரதீர செயல்களால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருந்த பாட்டர், அதே விளையாட்டால் மரணமடைந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.