Home உலகம் அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள் பந்தய குழுக்களிடையே மோதல் – 9 பேர் பலி!

அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள் பந்தய குழுக்களிடையே மோதல் – 9 பேர் பலி!

549
0
SHARE
Ad

america1வாகோ, மே 19 – அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், மோட்டார் சைக்கிள் பந்தய குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

டெக்சாஸ் மாகாணம் வாகோ நகரில் இருக்கும் உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு மூன்று மோட்டார் சைக்கிள் பந்தய குழுக்களுக்கு இடையெ மோதல் ஏற்பட்டது. அந்த மோதல், வாகனம் நிறுத்துமிடத்தில், திடீர் என பயங்கர சண்டையாக மாறியது.

பந்தய குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் கத்தி மற்றும் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகக் கூறப்படுகிறது. மேலும், 18 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

உயிரிழந்தவர்கள் அனைவரும் மோதலில் ஈடுபட்டவர்கள் தான் என்றும், பொதுமக்களோ, காவல் துறையினரோ இந்த சம்பவத்தில் பாதிக்கப்படவில்லை என்று வாகோ வட்டாரங்கள் கூறுகின்றன.