Home வணிகம்/தொழில் நுட்பம் விற்பனையாகும் மலாயன் வங்கியின் பப்புவா நியூ கினி கிளை!

விற்பனையாகும் மலாயன் வங்கியின் பப்புவா நியூ கினி கிளை!

775
0
SHARE
Ad

Maybank..பப்புவா நியூ கினியா, மே 19 – ஆசியாவின் முன்னணி வங்கிகளுள் ஒன்றான மலாயன் வங்கியின், பப்புவா நியூ கினியா பிரிவு 117.15 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

இது தொடர்பாக மலாயன் வங்கியின் தலைமை நிர்வாகி டத்தோ அப்துல் பாரித் அலைஸ் கூறுகையில், “பப்புவா நியூ கினியாவில் எங்கள் வங்கியின் வர்த்தக பிரிவு பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. எனினும், எங்களின் முதலீடுகளுக்கு ஈடு கொடுக்கும் படியான வர்த்தகம் ஆசியா மற்றும் சீன வட்டாரங்களில் நடைபெறுவதால் அந்த பகுதிகளில் அதிக கவனத்தை செலுத்த முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

பப்புவா நியூ கினியாவின் மலாயன் வங்கிப் பிரிவை ‘கினா வெஞ்சர்ஸ்’ (Kina Ventures) நிறுவனத்திற்கு விற்பனை செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும், இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் விற்பனை நடைபெறலாம் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.