Home இந்தியா என்னை வீழ்த்த நினைப்பவர்கள் ஒருபோதும் வென்றதில்லை – ஜெயலலிதா

என்னை வீழ்த்த நினைப்பவர்கள் ஒருபோதும் வென்றதில்லை – ஜெயலலிதா

412
0
SHARE
Ad

jayalalithaa3சென்னை, மே 19 – அதிமுக தலைமையின் மீது மிகுந்த பாசமும், அன்பும் கொண்ட கட்சியினர் எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் நம்பிக்கையோடும், மன உறுதியோடும் செயல்பட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துளார்.

அரசியல் எதிரிகள் கட்சியின் வளர்ச்சியைக் கண்டும், வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேருவதைக் கண்டும் பொறாமை கொண்டவர்களாக பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

என்னை வீழ்த்த நினைத்தவர்கள் ஒருபோதும் வென்றதில்லை, கட்சியினர் நினைத்தது குறித்த நேரத்தில் நடக்கும் இதை யாராலும் தடை செய்ய முடியாது என ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.