Home தொழில் நுட்பம் கால மாற்றத்தை நுணுக்கமாகக் காட்ட கூகுள் புதிய முயற்சி!

கால மாற்றத்தை நுணுக்கமாகக் காட்ட கூகுள் புதிய முயற்சி!

457
0
SHARE
Ad

Time-lapse-mining-4கோலாலம்பூர், மே 19 – கால மாற்றத்தை புகைப் படங்கள் மூலம் நுணுக்கமாகக் காட்ட முயன்ற கூகுளின் முயற்சிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைத்துள்ளது.

Time-lapse-mining-1கால மாற்றம் என்பது மனிதன், இடங்கள், பொருட்கள் என அனைத்திற்கும் பொதுவான ஒன்று. நாம் நாளுக்கு நாள் எத்தகைய மாற்றங்களை அடைந்து வருகிறோம் என்பதற்கு நமது புகைப்படங்களே சாட்சி. அத்தகைய புகைப்படங்களைக் கொண்டு, கூகுளும், வாஷிங்டன் பல்கலைக்கழகமும் இணைந்து உலக அளவில் புகழ்பெற்ற இடங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள், எத்தகைய கால மாற்றத்தை அடைந்துள்ளன என்பதை நமக்கு எடுத்துக்காட்டி உள்ளன.

Time-lapse-mining-3இதற்காக கூகுள் ஆராய்ச்சியாளர்கள், பொது ஊடகங்களில் இருந்து சுமார் 86 மில்லியன் புகைப்படங்களை எடுத்து, அவற்றின் நுணுக்கமான மாற்றங்களையும் ஆராய்ச்சி செய்து கண்டறிந்ததனர். பின்னர், அவற்றை ‘டைம் லேப்ஸ் மைனிங்’  (Time lapse Mining) தொழில்நுட்பம் மூலம் மாற்றங்களுக்கு ஏற்றார் போல் ஒன்றிணைத்து வழங்கி உள்ளனர்.

#TamilSchoolmychoice

Time-lapse-mining-2காலங்கள் தாண்டி நீடித்து இருக்கும் புகழ்பெற்ற இடங்களும், கட்டிடங்களும், மலைகளும் எத்தனை எத்தனை மாற்றங்களை கடந்து வந்துள்ளன என்பதை பார்ப்பதற்கு மிகவும் பிரம்மிப்பாக உள்ளது.