Home இந்தியா இலஞ்சம் கொடுக்க முயன்ற கெஜ்ரிவால் மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு!

இலஞ்சம் கொடுக்க முயன்ற கெஜ்ரிவால் மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு!

627
0
SHARE
Ad

delhi-arvind-kejriwal-daughter-photo-Vulgar-Obscen-comments-facebook-post-news-hindi-india-74955புதுடெல்லி, மே 19 – ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2011-ஆம் ஆண்டு, லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. லஞ்சம் கொடுக்க முயன்றும், அரசு ஊழியர் அதனை வாங்காவிட்டாலும், அது குற்றம்தான் என தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், அரசு ஊழியரின் நேர்மையை சோதிக்க லஞ்சம் கொடுக்க முயன்ற கெஜ்ரிவாலின் மகளை கைது செய்ய வேண்டுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

டெல்லியில் நேற்று ஆட்டோ ஓட்டுநர் மத்தியில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு 70 முதல் 80 சதவீதம் ஊழல் குறைந்துவிட்டது.

எனது மகள் ஓட்டுநர் உரிமம் வாங்க சென்ற போது தேவையான ஆவணம் கொண்டு வரவில்லை என பொய் சொல்லி, லஞ்சம் தர தயார் என கூறினார்.

அப்போது எனது மகள் செல்பேசியை எடுப்பதை பார்த்த அதிகாரி, லஞ்சம் வாங்க மறுத்துவிட்டார். இருப்பினும் தான் போன் செய்ய தான் செல்பேசியை எடுத்ததாகவும், பணம் தர தயார் என கூறிய போதும் அதிகாரி இலஞ்ச பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.

harshita-480பின்னர், சான்றிதழை காண்பித்து ஓட்டுநர் உரிமம் பெற்று சென்றார் என கூறினார். லஞ்சம் குறைந்துள்ளதை கூறிய கெஜ்ரிவாலின் பேச்சு, தற்போது அவரது மகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வேண்டுமென்றே இலஞ்சம் கொடுக்க முயன்ற கெஜ்ரிவாலின் மகளுக்கும், கெஜ்ரிவாலுக்கும் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பகத் சிங் கிராணடி சேனா அமைப்பின் தலைவர் தாஜிந்தர் பால் சிங், இந்த சம்பவம் தொடர்பாக, கெஜ்ரிவால் மகள் மீது போலீசில் புகார் அளித்துள்ளதாக கூறினார். இதற்கு மற்றொரு சமூக ஆர்வலர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால் மகளின் நடவடிக்கையும் தவறு செய்யும் தூண்டும் வகையில் தான் உள்ளது. எனவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புகார் கொடுக்கலாம்.

தவறு செய்ய தூண்டுவது தவறானது. இது தவறு செய்யாத அதிகாரியையும், தவறு செய்ய தூண்டுகிறது என சமூக ஆர்வலர் கூறியுள்ளார்.