Home நாடு ஹாடி அவாங்குடன் இணைந்து செயல்பட முடியாது – லிம் குவான் எங்

ஹாடி அவாங்குடன் இணைந்து செயல்பட முடியாது – லிம் குவான் எங்

499
0
SHARE
Ad

Lim Guan Engகோலாலம்பூர், மே 20 – பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்குடன் இணைந்து செயல்பட இயலாது என்று கூறி ஐசெக சார்பில் தனி நிழல் அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐசெக தலைமைச் செயலாளர் லிம் குவான்
எங், கூட்டணிக் கட்சிகளுடன் பல்வேறு விவகாரங்கள் தொடர்பில்
கலந்தாலோசிக்க ஹாடி அவாங் முன்வரவில்லை என்றும் இதன் காரணமாக பக்காத்தான் சார்பில் நிழல் அமைச்சரவை அமைப்பது சாத்தியமல்ல என்றும் தெரிவித்தார்.

“அவர் (ஹாடி அவாங்) எது குறித்தும் எங்களுடன் கலந்தாலோசிப்பது இல்லை.
அவர் சொந்த கட்சித் தலைவர்களுடனும் கூட கலந்தாலோசிப்பது இல்லை. பிறகு
எப்படி இணைந்து செயல்பட முடியும்?. ஹாடியுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை என்று முடிவெடுத்தாலும் கூட இதர பாஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருப்போம்,” என்று செய்தியாளர் கூட்டம் ஒன்றில் லிம் குவான் எங் கூறினார்.

#TamilSchoolmychoice

பக்காத்தான் கூட்டணி சார்பில் நிழல் அமைச்சரவை சாத்தியமல்ல என்று
குறிப்பிட்ட அவர், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் எந்த
முடிவையும் ஹாடி அவாங் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம்
முறியடித்துவிடுவார் என்றார்.

“ஹூடுட் சட்டம் உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பில் ஹாடி எங்களை
கலந்தாலோசிக்கவில்லை. எனவே நிழல் அமைச்சரவையை அமைப்பது என்பது கடினமான செயல் எனக் கருதுகிறேன். எனினும் பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் இணைந்து செயல்பட முடியும். ஏனெனில் ஒவ்வொரு கட்சிக்கும் என நிழல் அமைச்சரவை உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் தனி செய்தித் தொடர்பாளர்கள் உள்ளனர்.
பொதுநலன் சார்ந்த அம்சங்களில் அனைவரும் இணைந்து செயல்பட முடியும்,”
என்றார் லிம் குவான் எங்.

ஐசெக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிழல் அமைச்சரவையில் 34 பேர்
இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 18 வெவ்வேறு அமைச்சுகளுக்கு
பொறுப்பேற்றுள்ளனர். ஐசெக நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங்,
கெப்போங் எம்.பி., டாக்டர் டான் செங் கியா மற்றும் லிம் குவான் எங் ஆகிய
மூவருக்கும் அமைச்சுகள் ஒதுக்கப்படவில்லை.

“நிழல் பிரதமராக செயல்பட இருப்பதால் உங்களுக்கு அமைச்சு
ஒதுக்கப்படவில்லையா?” என்ற கேள்விக்கு, பதிலளித்த அவர், “நான் நிழல்
பிரதமர் அல்ல. இந்தக் கேள்வியை நீங்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் தான்
கேட்க வேண்டும்,” என்றார்.