Home உலகம் கயானா நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளி தமிழர் தேர்வு!

கயானா நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளி தமிழர் தேர்வு!

1049
0
SHARE
Ad

nagamootoo-moses1ஜார்ஜ்டவுன், மே 21 – கயானா நாட்டில் பிரதமர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் இந்திய வம்சாவளி தமிழரான மோசஸ் வீராசாமி நாகமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் அந்நாட்டின் புதிய பிரதமராக விரைவில் பதவியேற்கவுள்ளார். தென் அமெரிக்க நாடான கயானாவில் சுமார் 44 சதவீதம் இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர்.

அவர்களில் 3 சதவீதம் பேர் தமிழர் ஆவர். அந்நாட்டு பிரதமர் பதவிக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இந்திய வம்சாவளி தமிழரான மோசஸ் வீராசாமி நாகமுத்து வெற்றிபெற்றார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து அவர், வரும் 26-ஆம் தேதி பதவியேற்கிறார். கயானாவில் உள்ள தமிழர்கள் ஆதரவோடு பிரதமராகியுள்ள, மோசஸ் வீராசாமி நாகமுத்துவிற்கு, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.